மனைவி உடலில் வேறோரு ஆணின் படம் டாட்டூ.. ஆட்டோ டிரைவர் கைது

Tattoo Row Turns Violent : மனைவி உடலில் வேறோரு ஆணின் புகைப்படம் டாட்டூ ஆக இருந்ததாக கூறி, தாக்குதல் நடத்திய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Published on: May 22, 2026 at 11:18 am

வேலூர், மே 22, 2026: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தனது மனைவியின் உடலில் மற்றொருவரின் படம் மற்றும் பெயர் பச்சை குத்தப்பட்டிருப்பதை கண்டு கோபமடைந்த ஆட்டோ ஓட்டுநர் அஜித் (32), மனைவி பரசக்தி (28)யை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அஜித், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பரசக்தியை காதலித்து திருமணம் செய்தார். இந்தத் தம்பதியருக்கு, ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில், அடிக்கடி சண்டைகள் காரணமாக, பரசக்தி சில மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார்.
இதைத் தொடர்ந்து, அஜித், மாமியார் வீட்டில் சமரசம் செய்து, பரசக்தியை மீண்டும் அழைத்து வந்தார். அப்போது, அவரது உடலில் மற்றொரு ஆணின் பெயரும் படமும் பச்சை குத்தப்பட்டிருப்பதை கண்டு வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை (மே20, 2026) இரவு, மீண்டும் கோபமடைந்த அஜித், பரசக்தியை பலமுறை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், பரசக்தி பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார்.
இதற்கிடையில் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், பரசக்தியை மீட்டு முதலில் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர், அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வழக்குப்பதிவு- கைது

இது தொடர்பாக, குடியாத்தம் தாலுகா காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் உதவி ஆய்வாளர் கலைவாணி வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், மனைவியை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் அஜித் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : பேருந்தில் ஹார்ட் அட்டாக்.. தஞ்சாவூர் இளைஞர் மரணம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com