Praggnanandhaa : சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் ஆறாவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. பிரக்யானந்தா எப்படி?
Praggnanandhaa : சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் ஆறாவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. பிரக்யானந்தா எப்படி?

Published on: May 22, 2026 at 11:09 am
நியூயார்க், மே 22, 2026: இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, ருமேனியாவின் டீக் போக்டன்-டேனியலுடன் ஆறாவது சுற்றில் ஆட்டத்தை சமன் செய்தார். பிரக்ஞானந்தா தொடக்கத்தில் ஸ்டோன்வால் டச்சு முறையை கையாண்டார். 68 நகர்வுகளுக்குப் பிறகு ஆட்டம் சமனில் முடிந்தது.
அலிரேசா ஃபிரூஜா விலகல்
இந்தத் தொடரில், பிரான்சின் அலிரேசா ஃபிரூஜா, கணுக்கால் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். அவர், இரண்டு ஆட்டங்களில் விளையாடிய பிறகு தொடர முடியாது என முடிவு செய்தார். இதனால் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மர் ‘வாக் ஓவர்’ பெற்றார்.
முன்னிலை நிலை
வின்சென்ட் கெய்மர் – 4.5 புள்ளிகள் தனி முன்னிலை வகிக்கிறார். ஜோர்டன் வான் ஃபாரெஸ்ட், அனிஷ் கிரி, ஃபேபியானோ கருவானா, பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 3.5 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கின்றனர். இதற்கிடையில், மாக்சிம் வாஷியர்-லாக்ரேவ், வெஸ்லி – தலா 3 புள்ளிகளும், ஜவோகிர் சிந்தரோவ் – 2.5 புள்ளிகளும், டீக் போக்டன்-டேனியல் – 2 புள்ளிகளும் பெற்றுள்ளனர். இதில், அலிரேசா ஃபிரூஜா – 1 புள்ளி பெற்ற நிலையில் போட்டியில் இருந்து விலகினார்.
பரிசுத் தொகை
இந்தப் போட்டியில் மொத்த பரிசுத்தொகை – 375,000 அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில், வெற்றியாளருக்கு – 100,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். இந்தத் தொடரை பொறுத்தமட்டில் இன்னும் மூன்று சுற்றுகள் மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மலேசியா பேட்மிண்டன்.. இந்தியாவின் ஒரே நம்பிக்கை.. காலிறுதியில் அஷ்மிதா சாலிஹா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com