கோவிலில் அவமானம், இஸ்லாம் மதம் மாறிய ஜெய்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

Jai Faces Temple Insults : நடிகர் ஜெய், இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: May 21, 2026 at 11:56 am

சென்னை, மே 21, 2026: ஒரு காலத்தில் அடுத்த பெரிய நட்சத்திரமாகப் வருவார் எனப் புகழப்பட்ட நடிகர் ஜெய், ‘பகவதி’ (2002) படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமானார்.
பின்னர் ‘சென்னை 600028’, ‘சுப்ரமணியபுரம்’, ‘வாமனன்’, ‘கோவா’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’ போன்ற படங்களில் வலுவான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இருப்பினும், தொடர்ந்து தரமான படங்களைத் தேர்வு செய்ய முடியாததால், அவரது திரை வாழ்க்கை பல ஆண்டுகளாக சரிவடைந்தது.

இஸ்லாம் மத மாற்றம்

இந்நிலையில், 2011-ல் ஜெய் இஸ்லாத்தைப் பின்பற்றத் தொடங்கினார். ஆரம்பத்தில் இதுதொடர்பான செய்திகளை மறுத்தாலும், 2019-ல் அவர் “நான் ஏழு ஆண்டுகளாக இஸ்லாத்தைப் பின்பற்றி வருகிறேன்” என்று விகடனுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தினார்.

“இஸ்லாத்தின் மீது எனக்கு விவரிக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றும், தனது பெயரை ‘அஜீஸ் ஜெய்’ என்று மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

கோவிலில் அவமானம், மசூதியில் மரியாதை

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில், சில கோவில்களில் தான் பல அவமானங்களை எதிர்கொண்டதாகவும், மசூதிகளில் தான் உண்மையான மரியாதையை பெற்றதாகவும் ஜெய் கூறினார்.
இது குறித்து அவர், “மசூதியில் யாரும் என்னிடம் பேசவில்லை; அனைவரும் சமமாகப் பிரார்த்தனை செய்தனர். வெளியே வந்தபின் மட்டுமே அவர்கள் பணிவாக பேசினர். அங்கே சமத்துவம் இருக்கிறது என்று உணர்ந்தேன்” என்று அவர் பகிர்ந்தார்.

மதம் மற்றும் தொழில் வாழ்க்கை

இந்நிலையில், நடிகர் ஜெய் தனது மதமாற்றத்திற்கும் திரை வாழ்க்கை சரிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வலியுறுத்தினார்.

அதில், “நான் சபரிமலைக்கு மாலை அணிந்தேன், இயேசு ஜெபமாலை அணிந்தேன், எல்லா தெய்வங்களையும் பின்பற்றினேன். ஆனால் சில அனுபவங்கள் என்னை திருப்தியளிக்கவில்லை. இஸ்லாத்தில் நான் தேடிய சமத்துவம் மற்றும் அமைதியை கண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மும்பை தாய் வீடு.. சென்னையை மிஸ் செய்கிறேன்.. நடிகை ஜோதிகா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com