மும்பை தாய் வீடு.. சென்னையை மிஸ் செய்கிறேன்.. நடிகை ஜோதிகா

Jyotika Misses Tamil Roots : நடிகை ஜோதிகாவுக்கு சென்னை நகரம், தமிழ் மொழி, குடும்ப உறவுகள் ஆகியவை அவருக்கு உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 21, 2026 at 11:41 am

சென்னை, மே 21, 2026: நடிகை ஜோதிகா தற்போது மும்பையில் இருந்தாலும், அவரது மனம் இன்னும் சென்னை நகரத்திலேயே உள்ளது. தமிழில் பேசும் சூழல், குடும்பம், கலாச்சாரம் ஆகியவற்றை அவர் தவறவிடுவதாக நினைவுகூர்கிறார்.

ஜோதிகா தற்போது மும்பையில் வசித்து வருகிறார். புதிய திட்டங்கள், படப்பிடிப்புகள் காரணமாக அவர் மும்பையில் அதிக நேரம் செலவிடுகிறார். ஆனால், சென்னையின் சூழல், தமிழ் மொழி, அன்பான மக்கள் ஆகியவற்றை அவர் அடிக்கடி நினைவுகூர்கிறார். இது பற்றி ஜோதிகா, சென்னை நகரம், தமிழ் மொழி, குடும்ப உறவுகள் ஆகியவை அவருக்கு உள்ளார்ந்த பிணைப்பை தருகின்றன. தமிழ் பேசும் சூழல் தான் தனது மனதிற்கு அமைதியை தருகிறது” என்றார். ஜோதிகா, தனது திரைப்பட வாழ்க்கையை மும்பையில் முன்னெடுத்து வருகிறார்.

அதேசமயம், சூர்யா மற்றும் குழந்தைகளுடன் சென்னை வாழ்க்கையை நினைவுகூர்கிறார். மேலும், “மும்பையில் இருந்தாலும், தமிழ் பேசும் தருணங்களை நான் தவறவிட்டுவிடுகிறேன்” என்று அவர் உணர்ச்சி பூர்வமாக பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : நினைவுகளை மீட்டெடுக்கும் காதல் கதை.. மெயின் வாபஸ் ஆவுங்கா ட்ரெய்லர் வெளியீடு!

அதில், “மும்பைதான் என் வீடு. நான் இங்குதான் வளர்ந்தேன். அதனால், நம் சொந்த மொழியை நாம் எப்போதும் மிஸ் செய்வேன். நான் இந்தியில்தான் என் பயணத்தைத் தொடங்கினேன். அதனால், நிச்சயமாக ஒரு வெற்றிடம் இருந்தது” என்றார்.

ஸ்கீரின் பத்திரிகைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், “தெற்கில் நான் செய்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அங்கே நான் செய்ததை, இந்தியில் செய்திருக்க மாட்டேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன், அங்கு பணியாற்றியதன் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அந்த அடித்தளம்தான் என்னை மீண்டும் இந்திக்குக் கொண்டு வந்துள்ளது என்று நான் உணர்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க : பஞ்சாப் பாடகி கொலை? கனடா தப்பிய குற்றவாளி.. பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com