CM Vijay Interaction : திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் முதல்வர் விஜயை சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
CM Vijay Interaction : திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் முதல்வர் விஜயை சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Published on: May 19, 2026 at 6:22 pm
Updated on: May 19, 2026 at 6:27 pm
சென்னை, மே 19, 2026: தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலைவர் தமிழ்குமரன், செயலாளர் கதிரேசன், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார், பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “திரையுலகத்திலிருந்து முதலமைச்சர் வந்துள்ளார். எங்களுடைய கோரிக்கைகளை மனுவாக வழங்கியுள்ளோம். அவர் நிச்சயமாக நல்லது செய்வார்” எனக் கூறினர்.
ஃபிலிம் சிட்டி கோரிக்கை
மேலும், சிறிய திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மானியம் நிறுத்தப்பட்டிருப்பதால், 40–50 தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். இதனை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டி போல, தமிழகத்திலும் ஃபிலிம் சிட்டி அமைக்க வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு முதலமைச்சர் படிப்படியாக செய்து தருவதாக உறுதி அளித்தார்.
எம்ஜிஆரின் மறுவடிவம்
இதற்கிடையில், “முதலமைச்சர் விஜயை பார்க்கும் போது எம்ஜிஆரை பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவர் மிகவும் பணிவுடன் இருக்கிறார். திரைத்துறைக்கு என்ன நல்லது செய்ய முடியுமோ, அதை செய்வேன் என நேரடியாக கூறியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது” என தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர், நடிகைகளின் சம்பள பகிர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அது தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறும்” எனத் தெரிவித்தனர்.
விஷாலின் தனிப்பட்ட கருத்து
திரைப்படத்துறை இலாகா முதல்வரிடம் இருக்க வேண்டும் என நடிகர் விஷால் கூறியிருந்தார். அதற்கு தயாரிப்பாளர் சங்கம், “அது விஷாலின் தனிப்பட்ட கருத்து. ஒட்டுமொத்த திரையுலகத்தின் கருத்து அல்ல. முதலமைச்சர் 40 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்தவர். அவர் நிச்சயமாக நல்லது செய்வார்” எனக் கூறினர்.
இதையும் படிங்க : பாக்ஸ் ஆபிஸில் செஞ்சூரியை நோக்கி கருப்பு.. 4ம் நாள் வசூல் அப்டேட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com