புதுக்கோட்டையில் பெண் பாலியல் வன்கொடுமை.. இருவர் கைது!

Pudukkottai Sexual Assault Case :இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நடந்தது. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: May 19, 2026 at 5:38 pm

புதுக்கோட்டை, மே 19, 2026; புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 35 வயதான பெண், தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவர், வேலை முடித்து பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, காரில் வந்த இருவர் வலுக்கட்டாயமாக அவரை காரில் ஏற்றிச் சென்றனர். அப்போது, மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் மயங்கிய பெண்ணை சாலையில் தள்ளிவிட்டு சென்றனர்.

இந்நிலையில், மயக்கம் தெளிந்த பெண் அழுது கூச்சலிட்டார். அப்பகுதி மக்கள் சத்தம் கேட்டு வந்து அவரை மீட்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவத்தில் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டனர். போலீசார் விரைவாக அவர்களை கைது செய்தனர். தற்போது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டது மணக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கார் உரிமையாளர் சேகர் (56) மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து (55) என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : ஸ்ரீபெரும்புதூரில் கானா பாடகர்கள் இரட்டை கொலை – பரபரப்பு.. குற்றவாளிகள் யார்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com