விஜய் அரசுக்கு 6 மாதம் அவகாசம் கொடுங்கள்.. பழ. நெடுமாறன்!

Nedumaran Statement on Vijay : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசுக்கு 6 மாதம் அவகாசம் கொடுங்கள் என உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

Published on: May 19, 2026 at 5:29 pm

தஞ்சாவூர், மே 19, 2026: தஞ்சாவூரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாளில், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன், புதிய தவெக அரசு மற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

மே 18 அன்று, ஈழப் போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூரும் வகையில் உலகத் தமிழர்கள் ‘முள்ளிவாய்க்கால் நினைவு நாள்’ அனுசரித்தனர். இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு மன்றத்தில் பழ. நெடுமாறன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மரணித்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பழ. நெடுமாறன் உரை

இதில் பேசிய பழ. நெடுமாறன், “பிரபாகரன் போராட்டத்திற்கு எந்த நாடும் உதவ முன் வரவில்லை; உலகத் தமிழர்கள் அளித்த நன்கொடைகளால் மட்டுமே அவர் போராடினார்” என்றார். மேலும், விடுதலை புலிகளின் பொன்விழாவை உலகத் தமிழர்கள் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், குறைந்தது 6 மாதங்கள் அவகாசம் கொடுத்தால் தான் அவர்கள் திட்டங்கள் தெளிவாக தெரியும் எனக் கூறினார்.
மேலும், முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை

இதையடுத்து, “பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு ஈரான் போரை காரணமாக மத்திய அரசு சுட்டிக்காட்டலாம். ஆனால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் இந்திய அரசு விலையை குறைக்கவில்லை” என்றார். தொடர்ந்து, “பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வருவாயை அரசு எதற்காக பயன்படுத்துகிறது என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : மக்களோடு, மக்களாக நின்றவர்.. தூத்துக்குடியில் கீதா ஜீவன் தோல்வி.. கனிமொழி வேதனை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com