பி.எம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக் கொள்வீர்களா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்!

TN Minister Rajmohan Statement : பி.எம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு தமிழக அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளார்.

Published on: May 19, 2026 at 4:49 pm

சென்னை, மே 19, 2026: சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் ஆய்வுக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் புதிய பாடத்திட்டம் மற்றும் இருமொழிக் கொள்கை குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

புதிய பாடத்திட்டம்

1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான 9 புதிய பாடநூல்களை அமைச்சர் வெளியிட்டார். இந்த நிகழ்வில், மாநில அளவிலான 114 முதன்மை கருத்தாளர்கள் பங்கேற்றனர். இந்தப் பாடத்திட்டங்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, மாணவர்களுக்கு சுமை குறையும்படி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “இருமொழிக் கொள்கை என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை. அதில் சமரசம் இல்லை” என்றார்.

பி.எம் ஸ்ரீ திட்டம்

பி.எம்.ஶ்ரீ திட்டம் தொடர்பான கேள்விக்கு, “கடந்த 2 ஆண்டுகளாக நிதி வரவில்லை. எந்த மறைமுக அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம்” என்றார். மேலும், கொள்கை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெளிவுபடுத்தினார்.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 20, புதன்கிழமை) காலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடப்படும். முன்னதாக, பெண்ணுரிமை, மண்ணுரிமை, குழந்தைகள் நலம், முதியோர் நலம் ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை கொடுக்கும் என்றும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தும் நோக்குடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :தி.மு.க தோற்றாலும், நாம்தான் ஆள்கிறோம்.. மு.க ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com