மக்களோடு, மக்களாக நின்றவர்.. தூத்துக்குடியில் கீதா ஜீவன் தோல்வி.. கனிமொழி வேதனை!

Thoothukudi Election Setback: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தோல்வியுற்ற நிலையில், கனிமொழி எம்.பி வருந்தினார்.

Published on: May 19, 2026 at 4:41 pm

தூத்துக்குடி, மே 18, 2026: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் சந்தித்த தோல்வி குறித்து வேதனை தெரிவித்தார்.

இது குறித்து பேசிய கனிமொழி, “சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஆராய வேண்டும்; விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றதை பாராட்டுகிறேன். எனினும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் ஏற்பட்ட தோல்வி ஏற்றுக்கொள்ள முடியாதது; கீதா ஜீவன் மக்களோடு மக்களாக பணி செய்தவர், ஆனாலும் தோல்வி ஏற்பட்டுள்ளது” என்றார்.

மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டத்திற்கு இரண்டு பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்து உண்மை நிலவரத்தை ஆராய உள்ளார். அவர்களிடம் நிர்வாகிகள் உண்மையான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் எனக் கனிமொழி கேட்டுக்கொண்டார். மேலும், சரியான தகவல்களை வழங்கினால் மட்டுமே தலைமை கட்டமைப்பை மாற்ற முடியும் எனக் கூறினார்.

கூட்டணி குறித்து…

தொடர்ந்து, “கூட்டணி குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது” எனக் கனிமொழி தெரிவித்தார். தொடர்ந்து, திமுக தன்னம்பிக்கையுடன் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் திறன் கொண்டது என வலியுறுத்தினார். மேலும், “திமுக யார் என்பதை அனைவருக்கும் காட்ட முடியும்” என்றார்.

கீதா ஜீவன் தோல்வி

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கீதா ஜீவன், தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத்திடம் 38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கீதா ஜீவன் இந்தத் தொகுதியில் கடந்த 2006, 2016, 2021 தேர்தல்களில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில், இந்த முறை ஏற்பட்ட தோல்வி, கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மதுரை மத்திய தொகுதியில் தோல்வி.. அரசியலில் இருந்து பி.டி.ஆர் ஓய்வு?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com