Pocket Money Goes Digital : பேடிஎம் தனது புதிய பாக்கெட் மணி (Pocket Money) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இளசுகளுக்காக தொடங்கப்பட்ட திட்டம் ஆகும்.
Pocket Money Goes Digital : பேடிஎம் தனது புதிய பாக்கெட் மணி (Pocket Money) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இளசுகளுக்காக தொடங்கப்பட்ட திட்டம் ஆகும்.

Published on: May 19, 2026 at 12:11 pm
புதுடெல்லி, மே 19, 2026: பேடிஎம் நிறுவனம் தனது புதிய பாக்கெட் மணி வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறிப்பாக இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன், அவர்களுக்கு நிதி மேலாண்மை மற்றும் செலவினக் கட்டுப்பாட்டை கற்றுக்கொடுக்க உதவுகிறது.
திட்டத்தின் அம்சங்கள்
இந்த பாக்கெட் மணி திட்டம் மூலம் 13–18 வயது இளைஞர்கள் தங்களுக்கென தனிப்பட்ட வாலெட் பெற முடியும். மேலும், இந்தத் திட்டம் பெற்றோர் கட்டுப்பாடு மற்றும் அனுமதி வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். தொடர்ந்து, இது டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை பாதுகாப்பாக வழங்குகிறது. இதன்மூலம், செலவினக் கட்டுப்பாடு கற்றுக்கொள்ள உதவும். மேலும், சிறிய சேமிப்பு பழக்கத்தை வளர்க்கும். தொடர்ந்து, ஆன்லைனில் பொருள்கள் வாங்குதல் மற்றும் நிதி சேவைகள் பயன்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.
அந்த வகையில், இத்திட்டம் இளைஞர்களுக்கு நிதி அறிவு வளர்க்கும் முக்கிய கருவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, டிஜிட்டல் இந்தியா முயற்சியில் ஒரு புதிய படியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பேடிஎம் இளைஞர்களை புதிய வாடிக்கையாளர்களாக ஈர்க்கும் முயற்சியாக இதை முன்னெடுத்துள்ளது.
இதையும் படிங்க : ஆதார் முகவரி திருத்தம்.. மின்சார பில் போதும்.. புதிய விதிகள் சொல்வது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com