Vaibhav Sooryavanshi Call-Up : வைபவ் சூர்யவன்ஷியை உடனடியாக இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்க வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
Vaibhav Sooryavanshi Call-Up : வைபவ் சூர்யவன்ஷியை உடனடியாக இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்க வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Published on: May 18, 2026 at 11:52 am
புதுடெல்லி, மே 18, 2026: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி, 15 வயதான வையபவ் சூர்யவன்ஷியை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வலியுறுத்தியுள்ளார். அதில் ரவி சாஸ்திரி, “வயது முக்கியமல்ல, திறமை மற்றும் தன்னம்பிக்கை தான் முக்கியம்” எனக் கூறி, அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் டி20 அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
வையபவ் சூர்யவன்ஷியின் சாதனைகள்
வைபவ் சூர்யன்ஷி, ஐ.பிஎல் 2026-இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 11 இன்னிங்ஸ்களில் 440 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 236.56 ஸ்ட்ரைக் ரேட் உடன் விளையாடி, 40 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இது இந்த சீசனில் அதிகபட்சமாகும். இவர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிராக 36 பந்துகளில் சதம் அடித்தார். முன்னதாக, 19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் உலகக்கோப்பை 2026 இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 175 ரன்கள் (80 பந்துகள்) அடித்து இந்தியாவை வெற்றியாளராக மாற்றினார்.
ரவி சாஸ்த்ரியின் கருத்து
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி, “வைபவ் சூர்யவன்ஷி 15, 16 அல்லது 14 வயது என்றால் என்ன? எனக்கு கவலையில்லை. அவர் தற்போது விளையாடும் விதம், இரட்டிப்பு வயதுடைய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது, அனைத்தும் அவரை இந்திய அணிக்குத் தயாராக காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இளைஞர்களை விரைவாக அணியில் சேர்க்க வேண்டுமெனில், டி20 வடிவமே சரியானது” என அவர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து, “ஜூன் மாதம் அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் வையபவ் சூர்யவன்ஷியை அறிமுகப்படுத்த வேண்டும்” எனவும் பி.சி.சி.ஐ.க்கு ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்.. வெள்ளி வென்ற இந்திய ஆடவர் ஜோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com