தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர் கட்சி ஆரம்பித்தால் திராவிட கட்சிதான்.. கமல்ஹாசன்

Kamal Haasan in Madurai : “தமிழ்நாட்டில் இருந்து தமிழ் பேசும் நபர் கட்சி ஆரம்பித்தால், அதுவும் திராவிடக் கட்சிதான்” என நடிகர் கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

Published on: May 17, 2026 at 8:52 pm

மதுரை. மே 17, 2026: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான கமல் ஹாசன், திங்கள்கிழமை (மே 18) காலை நடைபெற உள்ள ‘சேயோன்’ படத்தின் பூஜையில் கலந்துகொள்ள மதுரைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வந்துள்ளார். இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, “புதியவர்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். ரொம்பவும் எதிர்பார்க்கக் கூடாது” என்றார். மேலும், மக்கள் தான் வாக்களித்துள்ளதால், நல்லபடியாக நடக்கிறதா என்பதை மக்கள் கவனிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திராவிட அரசியல்

தொடர்ந்து, திராவிடம் அல்லாத ஆட்சி என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “தமிழ்நாட்டில் இருந்து தமிழ் பேசுபவர் ஒருவர் கட்சி ஆரம்பித்தால், அது திராவிடக் கட்சிதான்” என்று பதிலளித்தார்.

ரஜினி-கமல் உறவு

ரஜினி-கமல் உறவு குறித்த கேள்விக்கு, “நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் பொறாமைப்பட்டதில்லை. போட்டி போடுவோம்; ஆனால் பொறாமை இல்லை” எனக் கூறினார். மேலும், “தமிழ்நாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்கள் நாங்கள்; சினிமா துறையில் இருந்தாலும், கிரிக்கெட் விளையாடினாலும் இப்படித்தான் இருந்திருக்கும்” என சிரிப்புடன் விளக்கினார்.

கோரிக்கை மனு

முன்னதாக மே16ஆம் தேதி கமல்ஹாசன் தமிழக முதலமைச்சர் விஜயை சந்தித்துப் பேசினார். இதுபற்றிய கேள்விக்கு, “பத்திரிகையில் வெளியான கோரிக்கைகள் குறித்து, “எது உங்களுக்கு நல்லது என்று தோன்றுகிறதோ அதை சிறப்பாகக் கோடிட்டுக் காட்ட வேண்டும்” எனக் கூறினார்.

‘சேயோன்’ பட பூஜை

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகயுள்ள சேயோன் படத்தின் பூஜை, மே 18ஆம் தேதி காலை கருமத்தூரில் நடைபெற உள்ளது; இந்தப் படக்குழுவுக்கு கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : உதயநிதிக்கு பாராட்டு, விஜய்க்கு ஆலோசனை.. நெல்லையில் கனிமொழி அதிரடி!

தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன்.. மு.க ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!
Kamal Haasan Meets M K Stalin

தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன்.. மு.க ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com