Jana Nayagan piracy Case : ஜனநாயகன் திரைப்படம் ஆன்லைனில் கசிந்த விவகாரத்தில் மூன்று பேர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Jana Nayagan piracy Case : ஜனநாயகன் திரைப்படம் ஆன்லைனில் கசிந்த விவகாரத்தில் மூன்று பேர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Published on: May 16, 2026 at 8:04 pm
சென்னை, மே 16, 2026: தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த வழக்கில் மூன்று பேர் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சைபர் குற்றப்பிரிவு விசாரணையில், பிரசாந்த், செல்வம், பாலா என்ற பாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஏப்ரல் 11, 2026 அன்று, விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஹெச்.டி தரமான பதிப்பு இணையத்தில் கசிந்தது. இது திரையரங்க வெளியீட்டுக்கு முன்பே பரவியதால், தயாரிப்பு நிறுவனத்துக்கும் தமிழ் திரைப்படத் துறைக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தது. இந்த வழக்கில் பிரசாந்த், செல்வம், பாலா என்ற பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களது மீது திருட்டு, சட்டவிரோத செயலாக்கம், ஆன்லைன் பரவல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், மே 13, 2026 அன்று, இவர்களுக்கு எதிராக ‘குண்டாஸ் சட்டம்’ கீழ் தடுப்பு காவல் உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாக்ஸ் ஆபிஸில், ‘கருப்பு’ எப்படி? சாதித்தாரா சூர்யா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com