DMK: நீட் தேர்வில் உண்மை இல்லை என தி.மு.க. கூறியுள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு எதிராக போராடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
DMK: நீட் தேர்வில் உண்மை இல்லை என தி.மு.க. கூறியுள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு எதிராக போராடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

Published on: May 16, 2026 at 4:04 pm
Updated on: May 16, 2026 at 4:05 pm
சென்னை, மே 16, 2026: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.மு.க. மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார் செய்தியாளர்களை இன்று (சனிக்கிழமை) சந்தித்தார்.
அப்போது, “நீட் தேர்வு ஒரு ஃபோர்ஜரி; அதில் உண்மைத் தன்மை இல்லை. நீட் தேர்வை பொறுத்தமட்டில் தனியார் நிறுவனங்களுக்கு வருமானம் ஈட்டித் தரக் கூடிய ஒன்றாக விளங்குகிறது. தற்போது வினாத்தாள் கசிவின் மூலம் இதன் உண்மை விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது” என்றார்.
மேலும், “மீண்டும் ஒருமுறை இப்படி நடந்தால் தமிழ்நாட்டில் தி.மு.க. மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்” எனவும் அவர் எச்சரித்தார். திமுக மாணவரணி, நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு போலீசார் மேற்கொண்ட அடக்குமுறையை கடுமையாக கண்டித்துள்ளது. மாணவர்களின் எதிர்ப்பை ஒடுக்குவது ஜனநாயக விரோதமாகும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இளங்கலை நீட் 2026 தேர்வு, கேள்வித்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், நாடு முழுவதும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சி.பி.எஸ்.இ-யில் மும்மொழி கட்டாயம்.. ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com