TN cabinet expansion : தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளர் செந்தில் குமார், மே 16, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்துள்ளார்.
TN cabinet expansion : தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளர் செந்தில் குமார், மே 16, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்துள்ளார்.

Published on: May 16, 2026 at 3:51 pm
சென்னை, மே 16, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளர் செந்தில் குமார், மே 16, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தார். அப்போது, அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்தினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜயின் அமைச்சரவையில், இதுவரை 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படாததால், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது. முன்னதாக, மே 10, 2026 அன்று ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர், ஆனால் இன்றுவரை துறைகள் ஒதுக்கப்படவில்லை.
இதனால், அரசின் செயல்பாடுகள் தாமதமாகும் அபாயம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், முதல்வர் விஜயின் தனிச் செயலாளர் செந்தில் குமார், ஆளுநரை சந்தித்து அமைச்சர்களுக்கான துறைகள் பட்டியல் வழங்கினார். மேலும், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கோப்புகளும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு, அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியினர் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், அதிமுக எம்எல்ஏக்கள் சிலருக்கும் அமைச்சரவை இடம் வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதனால், ஆளுநரை சந்தித்த தனிச் செயலாளர் நடவடிக்கை, கூட்டணி அரசியல் சமநிலையை உறுதி செய்யும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க : 36 சதவீத கமிஷன் அரசியல்.. தி.மு.க.வை சூசகமாக விமர்சித்த மாணிக்கம் தாகூர்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com