படங்களின் பட்ஜெட் குறைப்பு.. கடிதம் பகிர்ந்த கமல்ஹாசன்.. தயாரிப்பாளர்கள் வரவேற்பு!

Kamal Haasan’s Call to Cut Costs : திரைத்துறையினர் தங்களது பட்ஜெட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் திறந்த கடிதம் வெளியிட்டுள்ளார்.

Published on: May 16, 2026 at 2:18 pm

சென்னை, மே 16, 2026: இந்திய திரைப்படத் துறையில் அதிகரித்து வரும் தயாரிப்பு செலவுகளை குறைக்க வேண்டும் என்ற கமல்ஹாசனின் வேண்டுகோளை ‘கல்கி 2898 AD’ மற்றும் ‘புலி’ பட தயாரிப்பாளர்கள் ஆதரித்துள்ளனர். இந்தத் தயாரிப்பாளர்கள், சினிமாவின் எதிர்காலத்தை பாதுகாக்க பொறுப்பான செலவுக் கட்டுப்பாடு அவசியம் என வலியுறுத்தினர்.

கமல்ஹாசன் வேண்டுகோள்

நடிகரும், ராஜ்யசபா உறுப்பினருமான கமல்ஹாசன், மேற்காசியாவில் நிலவும் பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு, இந்திய திரைப்படத் துறையில் அவசியமற்ற செலவுகளை குறைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் திறந்த கடிதம் வெளியிட்டார்.

அந்தக் கடிதத்தில், “பட்ஜெட்டுகள் ஏற்கனவே அதிகரித்து வருகின்றன, சந்தை மீட்பு சீராக இல்லை. இதனால், எதிர்காலத்தில் மக்களின் பொழுதுபோக்கு செலவுகள் குறையக்கூடும்” எனத் தெரிவித்து இருந்தார். மேலும் சில பரிந்துரைகளையும் அவர் தெரிவித்து இருந்தார். அதில், அவசியமற்ற வெளிநாட்டு படப்பிடிப்புகள் தவிர்க்கப்பட வேண்டும்; திட்டமிடல் குறைபாடுகள் மற்றும் தயாரிப்பு தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்; மேலும் தொழிலாளர்களின் சம்பளம், பாதுகாப்பு, உணவு, போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் பாதிக்கப்படக்கூடாது எனவும் தெரிவித்து இருந்தார்.

நடிகர் கமல்ஹாசனின் இந்த விவாதம், பெரிய பட்ஜெட் படங்களின் செலவுக் கட்டுப்பாடு குறித்து புதிய உரையாடலைத் தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : துரந்தர்-2 ஒ.டி.டி.க்கு வந்தாச்சு.. எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com