ஈரோட்டில் கிரேனில் இருந்து ரெயில் எஞ்சின் பெட்டி விழுந்து விபத்து!

Erode: ஈரோடு அருகே 70 டன் எடையுள்ள ரெயில் எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

Published on: May 16, 2026 at 1:46 pm

ஈரோடு, மே 16 2026: ஈரோடு அருகே உள்ள ரெயில்வே லோகோ பணிமனையில் 70 டன் எடையுள்ள ரெயில் எஞ்சின் பெட்டியை கிரேன் மூலம் தூக்கும் பணிகள் நடைபெற்றபோது திடீரென விபத்து ஏற்பட்டது.

சுமார் 30 அடி உயரத்தில் தூக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டி, கிரேனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

ரெயில் பெட்டி கீழே விழுந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் தற்*லைகள் அதிகரிப்பு.. நாட்டிலேயே இரண்டாம் இடம்!

தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன்.. மு.க ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்! Kamal Haasan Meets M K Stalin

தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன்.. மு.க ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com