விஜய் பற்றி கேட்ட ரசிகர்.. வெட்கத்துடன் பதிலளித்த திரிஷா!

Trisha’s Blush Goes Viral : நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய் தொடர்பான கேள்விக்கு திரிஷா வெட்கத்துடன் பதிலளித்தார்.

Published on: May 16, 2026 at 11:24 am

Updated on: May 16, 2026 at 11:25 am

சென்னை, மே 15, 2026: திரிஷா கிருஷ்ணன் தனது புதிய படம் கருப்பு திரையிடப்பட்டபோது ரசிகர்கள் விஜயைப் பற்றி கேள்வி கேட்டதும், அவர் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே பதிலளித்தார். “கண்டிப்பா” என்று கூறிய அவர், முகத்தைத் தாழ்த்தி, ரசிகர்களிடம் கையை அசைத்து விட்டு சென்றார். இந்த தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

திரையரங்கில் நடந்த சம்பவம்

நடிகை திரிஷா, கருப்பு படத்தின் முதல் நாள், முதல் காட்சி திரையிடலை சென்னை ரோஹினி சில்வர் ஸ்கிரீன்ஸ் திரையரங்கில் பார்த்தார். இந்நிலையில், அவர் திரையரங்கில் இருந்து வெளியேறும் போது ரசிகர்கள் அவரது காரைச் சூழ்ந்து புகைப்படம் எடுத்தனர். அப்போது ரசிகர் ஒருவர் தளபதியைக் கேட்டேன்னு சொல்லுங்க” என்றார். இதற்குப் பதிலளித்த திரிஷா, கண்டிப்பாக என்றார். மேலும், அவர் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே கை அசைத்து ரசிகர்களை வரவேற்றார்.

விஜய்- திரிஷா வதந்தி

விஜய்யும் திரிஷாவும் சினிமாவில் நீண்டகால நண்பர்கள்; இந்நிலையில் இவர்களை சுற்றி சமீபத்தில் சில வதந்திகள் பரப்பப்பட்டன. இதில் சில விஷமமான வதந்திகளும் அடங்கும். இந்த வதந்திகளை இருவரும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விஜய், அண்மையில் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது திரிஷாவும் கலந்துகொண்டார். இந்த நிலையில், இந்த வதந்திகள் மீண்டும் பரவத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நடிகர் ரவி மோகன்- கெனீஷா உறவு முறிவு? பரபரக்கும் கோடம்பாக்கம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com