வாயை மூடி சும்மா இரு டா.. கம்பீரை அதட்டிய ராகுல் டிராவிட்!

Gambhir on Superstar Culture : கௌதம் கம்பீரின் கருத்துக்கு ராகுல் டிராவிட் எதிராக பதிலளித்துள்ளார்; இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 15, 2026 at 3:20 pm

Updated on: May 15, 2026 at 3:23 pm

புதுடெல்லி, மே 15, 2026: முன்னாள் இந்தியா பயிற்சியாளரும் அணியின் கேப்டனுமான ராகுல் டிராவிட், தற்போதைய பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் “சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் நீக்கப்பட வேண்டும்” என்ற கருத்துக்கு எதிராக பதிலளித்துள்ளார். இது குறித்து ராகுல் டிராவிட், “எந்த விளையாட்டுக்கும் ஹீரோக்கள் தேவை. வீரர்கள் இல்லாமல் கற்பனைக்கு பிடிகொடுக்க முடியாது. விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்றவர்களை மாற்றுவது எளிதல்ல” என்று கூறியுள்ளார்.

கருத்து வேறுபாடு

முன்னதாக, கவுதம் கம்பீர் தனிநபர் சாதனைகளை விட அணி வெற்றிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; “சூப்பர் ஸ்டார் கலாச்சாரம்” நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த ராகுல் டிராவிட், “இந்திய கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார்கள் தேவை; அவர்கள் கடின உழைப்பால், தியாகத்தால் உருவாகிறார்கள்” எனப் பதிலளித்துள்ளார்.

மேலும், “நாட்டின் கனவுகளை துரத்தி பிடிக்க ஹீரோக்கள் அவசியம். அவர்கள் சாதனைகள் அணியின் வெற்றிக்கு அடித்தளம்” என்று டிராவிட் கூறியுள்ளார். ராகுல் டிராவிட் தன் காலத்தில் சச்சின், கங்குலி, லக்ஷ்மண், சேவாக் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் விளையாடினார்.

இந்த நிலையில் அவர், அவர்: “சூப்பர் ஸ்டாராக மாறுவது எளிதல்ல; அது கடின உழைப்பு, தியாகம், தொடர்ச்சியான சாதனை மூலம் மட்டுமே சாத்தியம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்திய ஹாக்கி பயிற்சியாளர் நியமனம்.. பி.ஆர் ஸ்ரீஜேஷ் அதிருப்தி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com