New Role for Devasirvatham: கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
New Role for Devasirvatham: கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Published on: May 14, 2026 at 7:49 pm
சென்னை, மே 14, 2026: தமிழ்நாடு அரசு, கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபி பதவிக்கு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்துள்ளது. இவர் இதற்கு முன்பு, டி.வி.ஏ.சி இயக்குநராகவும் போலீஸ் டி.ஜி.பி-ஆகவும் பணியாற்றியவர் ஆவார்.
இந்த நிலையில், புதிய பொறுப்பில், கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களின் செயல்பாடுகளை கண்காணித்து, ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த மாற்றம், அரசின் நிர்வாக திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, டேவிட்சன் தேவாசீர்வாதம், அனுபவமிக்க அதிகாரி என்பதால், பால் உற்பத்தி சங்கங்களில் சீர்திருத்தம் மற்றும் ஒழுங்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பல்வேறு ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விரைவில் மகளிர் உரிமைத் தொகை.. முதலமைச்சர் விஜய்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com