Kannada Actor Dileep Raj Passes : கன்னட நடிகர் திலீப் ராஜ் தனது 47வது வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
Kannada Actor Dileep Raj Passes : கன்னட நடிகர் திலீப் ராஜ் தனது 47வது வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

Published on: May 13, 2026 at 4:45 pm
பெங்களூரு, மே 13, 2026 : பிரபல கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், 47 வயதில் இதயக் குத்தால் மரணமடைந்தார். அவரது திடீர் மறைவு கன்னட திரைப்பட மற்றும் தொலைக்காட்சி உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் திலீப் ராஜ்-க்கு இன்று (மே 13, 2026) அதிகாலை, பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், உடனடியாக அபோலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், மருத்துவர்களால் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. மாரடைப்பு காரணமாக அவர் மரணம் அடைந்துள்ளார். திலீப் ராஜ்-ஐ பொறுத்தமட்டில் மிலனா (2007) படத்தில் மறைந்த நட்சத்திரம் புனீத் ராஜ்குமார் உடன் நடித்தது அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது.
மேலும், ஹிட்லர் கல்யாண தொலைக்காட்சி தொடரில் நாயகனாக நடித்ததால் பெரும் புகழ் பெற்றார். தொடர்ந்து, யூ-டர்ன், பாய் பிரண்ட், லவ் மோக்டெயில்3 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இதுமட்டுமின்றி, தனது டி.ஆர் கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பாரு, நா நின்னா பிடலாரே, கிருஷ்ணா ருக்கு போன்ற தொடர்களை தயாரித்துள்ளார். திலீப் ராஜ் தனது மனைவி ஸ்ரீவித்யா மற்றும் இரு மகள்கள் உடன் வாழ்ந்து வந்தார்.
இதையும் படிங்க : மீண்டும் புராணக் கதை.. பரபரக்கும் பாலிவுட்.. கடவுள் அவதாரம் எடுக்கும் ரன்வீர் சிங்? கதாபாத்திரம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com