ச்சீசீ.. இந்தப் பழம் புளிக்குது.. மும்பை அணிக்கு டாட்டா போட ஹர்திக் தயார்?

Lucknow, Delhi, Kolkata Eye Pandya : ஹர்திக் பாண்டே, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நல்ல உறவில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published on: May 13, 2026 at 4:37 pm

மும்பை, மே 13, 2026: பிரபல அதிரடி ஆட்டக்காரர் ஹார்திக் பாண்ட்யா மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான உறவு சீராக இல்லை; இவர், 2026 ஐ.பி.எல் தொடர் முடிந்தவுடன் அவர் புதிய அணிக்கு செல்ல வாய்ப்பு அதிகம். லக்னோ, டெல்லி, கொல்கத்தா போன்ற அணிகள் அவரை வரவேற்க தயாராக உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று சீசன்களில் ஹார்திக் பாண்ட்யா மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். எனினும், தற்போது உறவுகள் சிறப்பாக இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், 2024 மற்றும் 2026 ஐ.பி.எல் சீசன்கள் ஹர்திக் பாண்ட்யா ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தன.

இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்திறன் குறைவு, டிரஸ்ஸிங் ரூம் பிரச்சினைகள், மற்றும் ரசிகர்களின் அதிருப்தி காரணமாக ஹார்திக்கின் மும்பை இந்தியன்ஸ் பயணம் சிக்கலில் உள்ளது.
ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தமட்டில் இந்தியாவின் நம்பர் 1 ஆல்-ரௌண்டர் எனக் கருதப்படுகிறார்.

இவரிடம், பேட்டிங், பந்துவீச்சு, மற்றும் கேப்டன்சி திறன்கள் இருந்தாலும், மும்பை இந்தியன்ஸில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதற்கிடையில், சூர்யகுமார் யாதவின் ரன்கள் குறைவு, பும்ராவின் விக்கெட் வீழ்ச்சி, ரோஹித் சர்மா பல போட்டிகளை தவறுதல் ஆகியவை அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளன எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ரூ.12 லட்சம் அபராதம்.. அக்ஸர் பட்டேல் செய்த தவறு என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com