மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சியை பிடிக்க வாக்காளர் திருத்தம் காரணம்.. மம்தா பானர்ஜி

West Bengal : மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சியை பிடிக்க வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Published on: May 11, 2026 at 4:43 pm

கொல்கத்தா, மே 11, 2026: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 31 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிகமான வாக்குகள் நீக்கப்பட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, திரிணாமூல் காங்கிரஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கல்யாண் பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

அதில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், பலர் நீக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும், 31 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசம், நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தது என அவர் சுட்டிக் காட்டினார்.
உதாரணமாக, ஒரு தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் 862 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனால் அங்கு 5,432 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர் எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, இது தொடர்பாக மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் புதிய மனுக்கள் தாக்கல் செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.

இதையும் படிற்க : ஒரு வருடம் தங்கம் வாங்க வேண்டாம் – பிரதமர் மோடி வேண்டுகோள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com