Actor Vishal : தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
Actor Vishal : தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

Published on: May 8, 2026 at 2:56 pm
Updated on: May 8, 2026 at 8:12 pm
சென்னை, மே 8, 2026: தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்; அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் விஷால், “ஒருவேளை அடுத்த அரசை தமிழக வெற்றிக் கழகம் இல்லை அமைக்கவில்லை என்றால், அதே சமயம் யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத, அதிர்ச்சிகரமான திமுக-அதிமுக கூட்டணி அமைந்தால் எப்படி இருக்கும்?
ஒரு குடிமகனாகவும் வாக்காளராகவும் பொதுமக்களிடையே அதன் விளைவு மிக மோசமானதாகவும் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்று நான் கருதுகிறேன். இது நிச்சயமாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 118 எல்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையில், அக்கட்சி சிறிய கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அன்று விஜய், இன்று கவர்னர்.. விமர்சனத்தை மாற்றிய, ஹாய் செல்லம் முத்துப்பாண்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com