மு.க ஸ்டாலின் எடுக்கும் முடிவை ஏற்கிறோம்.. காதர் மொகிதீன்!

IUML : “தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆட்சியமைப்பது குறித்து எங்களிடம் அணுகினார்கள்; மு.க ஸ்டாலின் எடுக்கும் முடிவுதான் எங்களின் முடிவு” என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தமிழக தலைவர் காதர் மொகிதீன் கூறினார்.

Published on: May 7, 2026 at 10:40 pm

சென்னை, மே 7, 2026: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது.
எனினும், ஆட்சியமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள் அவரிடம் இல்லை. இதற்கிடையில், தி.மு.க. கூட்டணியில் தேர்தலை சந்தித்து, 5 தொகுதிகள் வென்ற காங்கிரஸ் அணி மாறி த.வெ.க.வை ஆதரிகிறது.

காதர் மொகிதீன் பேட்டி

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க இன்னமும், 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தமிழக தலைவர் காதர் மொகிதீனிடம் ஏ.என்.ஐ தரப்பில் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த காதர் மொகிதீன், “தமிழக வெற்றிக் கழகத்தினர் எங்களிடம் வந்திருந்தனர். இந்த விஷயம் குறித்து நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த முடிவை ஸ்டாலின்தான் எடுக்க வேண்டும். அவர் என்ன முடிவெடுத்தாலும், அது எங்களுக்கு ஏற்புடையதே“ என்றார்.

மேலும், அவர் (மு.க. ஸ்டாலின்) ஒரு முடிவை எடுத்து, அதை எங்களிடம் அறிவிக்குமாறு நாங்கள் அவரிடம் கேட்டுக்கொள்கிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : வி.சி.க.வுக்கு கடிதம் அனுப்பிய விஜய்.. வி.சி.க நிலைபாடு என்ன? ரவிக்குமார் பதில்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com