Kangana’s Marriage Rumor : பாரதிய ஜனதா கட்சியில் ராகுல் காந்தி இணைந்தால் அவரை திருமணம் செய்வதாக கங்கனா ரணாவத் கூறியதாக வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவின.
Kangana’s Marriage Rumor : பாரதிய ஜனதா கட்சியில் ராகுல் காந்தி இணைந்தால் அவரை திருமணம் செய்வதாக கங்கனா ரணாவத் கூறியதாக வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவின.

Published on: May 5, 2026 at 12:27 pm
Updated on: May 5, 2026 at 12:28 pm
புதுடெல்லி, மே 5, 2026: நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை எம்.பி.யுமான கங்கனா ரணாவத், “ராகுல் காந்தி பா.ஜ.க.வில் இணைந்தால் அவரை திருமணம் செய்வேன்” எனக் கூறியதாக வதந்திகள் பரவின.
இது பற்றி பேசிய கங்கனா ரணாவத், “இது அருவருப்பான போலி செய்தி; பெண்களுக்கு அரசியலிலும் மரியாதை இல்லை என்பதற்கான சான்று” என்று கூறியுள்ளார். முன்னதாக, மே 3, 2026 அன்று “Naughty World” என்ற இன்ஸ்டாகிராம் மீம் பக்கம், கங்கனா ரணாவத் ராகுல் காந்தி பாஜகவில் சேர்ந்தால் திருமணம் செய்வேன் என்று கூறியதாக போலியான மேற்கோளை வெளியிட்டது. இந்த பதிவு விரைவில் வைரலாகி, சமூக வலைதளங்களில் விவாதம், நகைச்சுவை, விமர்சனங்களை தூண்டியது.
இந்த நிலையில், சிலர் இந்த வதந்தியை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டனர்; எனினும், சிலர் கங்கனாவை ஆதரித்து, “இது யாரோ விளம்பரப்படுத்த முயற்சி செய்கிறார்கள், கங்கனா இதுபோல் எதுவும் கூறவில்லை” என்று பதிவிட்டனர். இந்த நிலையில், இது அருவருப்பான செய்தி எனப் பதிவிட்டுள்ளார் கங்கனா ரணாவத்.
கங்கனா ரணாவத் தற்போது ஹிமாச்சலப் பிரதேசம், மண்டி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜக எம்.பி. ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மேற்கு வங்கத்தில் மீண்டும் மறுவாக்குப்பதிவு.. ஒரே தொகுதியில் 285 வாக்குச்சாவடிகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com