Actress Aishwarya Lakshmi on Vijay : நான் கேரளத்தில் இருக்கிறேன்; எனக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வருந்தியுள்ளார்.
Actress Aishwarya Lakshmi on Vijay : நான் கேரளத்தில் இருக்கிறேன்; எனக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வருந்தியுள்ளார்.

Published on: May 3, 2026 at 5:00 am
Updated on: May 2, 2026 at 11:51 pm
திருநெல்வேலி, மே 3, 2026: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சனிக்கிழமை (மே 2, 2026) கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “எனக்கு விஜய் அண்ணா ரொம்ப பிடிக்கும்; நான் கேரளத்தில் இருக்கிறேன். எனக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை. இது மிகவும் கஷ்டமாக இருந்தது.
எனது நண்பர்களில் பல விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள்; அவர் வெற்றிப் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம்” என்றார்.
மேலும், “விஜய் அரசியலுக்கு வர எந்தத் தேவையும் இல்லை; மக்கள் மீதான அன்பின் காரணமாக அவர் அரசியலுக்கு வந்துள்ளார்.
தனக்கு அன்பை கொடுத்த மக்களுக்கு அந்த அன்பை திருப்பிக் கொடுக்க அவர் அரசியலுக்கு வந்துள்ளார். விஜய் வெற்றிப் பெற வேண்டும் என்ற ஆசை உள்ளது. மீடியாவை பார்க்கும் போது மக்களுக்கும் அதே ஆசை உள்ளது தெரிகிறது என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : மங்காத்தா டா.. அஜித் ரசிகர்கள் டபுள் ஹேப்பி.. வெளியானது ரேஸின் ஆவணப் படம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com