நண்பனே தீர்த்துக் கட்டிய கொடூரம்.. புளோரிடா பல்கலை மாணவ-மாணவி கொலை.. பகீர் தகவல்கள்!

Bangladesh Student Association : அமெரிக்காவின், புளோரிடாவில் காணாமல் போன இரண்டாவது மாணவி நஹிதா பிரிஸ்டி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Published on: May 2, 2026 at 2:12 pm

Updated on: May 2, 2026 at 2:19 pm

நியூயார்க், மே 2, 2026: புளோரிடாவில் காணாமல் போன இரண்டாவது USF மாணவி நஹிதா பிரிஸ்டி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது குடும்பத்தினர் அவர் கொண்டிருந்த கனவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை பகிர்ந்துள்ளனர்.

நஹிதா பிரிஸ்டி (27) மற்றும் அவரது நண்பர் சமீல் லிமோன் (27) இருவரும் வங்களாதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும், இருவரும் யூனிவர்சிட்டி ஆஃப் சௌத் புளோரிடா (USF)-இல் டாக்டரல் மாணவர்களாக இருந்தனர்.
இந்நிலையில், ஏப்ரல் 16, 2026 அன்று இருவரும் கடைசியாக உயிருடன் காணப்பட்டனர். அதன் பின்னர், ஏப்ரல் 24 அன்று லிமோனின் உடல் ஹார்வார்டு ஃப்ராங்லாந்து பாலம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையில், ஏப்ரல் 26 அன்று டாம்பா பே பகுதியின், கரையோரத்தில் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட நிலையில் நஹிதாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில், ஹிஷாம் அபுகார்பியே (26) என்ற லிமோனின் ரூம்மேட் கைது செய்யப்பட்டுள்ளார். நஹிதா பிரிஸ்டி கெமிக்கல் என்ஜினீயரிங் துறையில் ஆராய்ச்சி செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 5 முதல் 6 ரவுண்ட் துப்பாக்கிச் சூடு.. உயிர் தப்பிய டொனால்ட் ட்ரம்ப்.. வெள்ளை மாளிகையில் பரபரப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com