நீங்க பட்டதாரியா? கரூர் வைஸ்யா வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணி.. முழு விவரம்!

KVB: கரூர் வைஸ்யா வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Published on: April 30, 2026 at 12:09 pm

சென்னை, ஏப்.30, 2026: கரூர் வைஸ்யா வங்கி (கே.வி.பி) 2026 ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,284 சிறப்பு அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் மேலாண்மை நிலை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்கள் ஆன்லைனில் ஏற்கப்படுகின்றன இதில், மொத்த காலியிடங்கள் 1,284 ஆகும். அந்த வகையில் சேவை அதிகாரி, வணிக வளர்ச்சி அதிகாரி, தொடர்பு அதிகாரி, டெக்னிக்கல் மேனேஜர், ஏரியா சேல்ஸ் மேனேஜர் (கிரெடிட் கார்டு மற்றும் கடன்கள்) மற்றும் பல்வேறு நிர்வாக மற்றும் மேலாண்மை நிலைகளில் பணியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் (KVB அதிகாரப்பூர்வ career portal) சென்று விண்ணப்பிக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவ அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும் நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வும் உண்டு.

கல்வித் தகுதி

பட்டப் படிப்பு மற்றும் எம்.பி.ஏ உள்ளிட்ட கல்வி பெற்றிருக்க வேண்டும். முதல்கட்ட பணியிடங்களுக்கு அனுபவம் தேவையில்லை; மேலாண்மை நிலைகளுக்கு 1–9 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
பொதுவாக 21–32 வயது (பணியிடத்தைப் பொறுத்து மாறுபடும்). இதில் அதிகப்பட்சமாக வணிக வளர்ச்சி அதிகாரி பணிக்கு 236 பேரும், சர்வீஸ் எக்ஸ்கியூடிவ் பணிக்கு 200 நபர்களும் தேவை. முழுமையாக விவரங்கள் வங்கி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் www.kvb.bank.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தியாவின் பல நகரங்களில் பணியிடங்கள் உள்ளன. புதிய பட்டதாரிகள் மற்றும் அனுபவமுள்ளவர்கள் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஜூன் 1 நோட்டு புத்தகங்கள் வழங்கல்.. மாணவ செல்வங்களே நோட் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com