2026 சட்டமன்ற தேர்தல்.. 5 மாநிலங்களில் யார் ஆட்சி? Exit Polls results 2026!

Tamil Nadu Exit Polls 2026 : 2026 சட்டமன்ற தேர்தலில் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்- முழு விவரம்

Published on: April 29, 2026 at 8:56 pm

Updated on: April 29, 2026 at 9:45 pm

திருநெல்வேலி, ஏப்.29, 2026: 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது என பல்வேறு கணிப்புகள் தெரிவிக்கின்றன; தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய இடங்களிலும் கடுமையான போட்டி நிலவுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் திமுக கூட்டணிக்கு முன்னிலை காட்டுகின்றன. அதிமுக கூட்டணி குறைவான இடங்களில் வெற்றி பெறும் எனவும், நடிகர் விஜய்யின் புதிய கட்சி “தமிழக வெற்றிக் கழகம் (டி.வி.கே) எதிர்பாராத அளவில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ முடிவுகள் மே 4, 2026 அன்று அறிவிக்கப்படும்.

கேரளம்

வாக்குகள்: 140 தொகுதிகள்
பெரும்பான்மை தேவை: 71 இடங்கள்
கருத்துக் கணிப்பு முடிவுகள்:

வோட் லைஃப்: இடதுசாரி கூட்டணி 58–68, காங்கிரஸ் கூட்டணி 70–80, பாஜக 0–3
ஜேவிசி–டைம்ஸ் நவ்: இடதுசாரி 52–61, காங்கிரஸ் 72–84, பாஜக 3–7
ஆக்சிஸ் மை இந்தியா: இடதுசாரி 49–62, காங்கிரஸ் 78–90, பாஜக 0–3
ஏபிபி–சி வோட்டர்: இடதுசாரி 71–77, காங்கிரஸ் 62–68, பாஜக 0–2
பீப்பள்ஸ் பல்ஸ்: இடதுசாரி 75–85, காங்கிரஸ் 55–65, பாஜக 0–3
பி மார்க்: இடதுசாரி 62–69, காங்கிரஸ் 71–79, பாஜக 1–4

தமிழ்நாடு

வாக்குகள்: 234 தொகுதிகள்
முக்கிய போட்டியாளர்கள்: திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம்

வாக்கு சதவீதம்: 85.10% (வரலாற்றில் அதிகபட்சம்)
கருத்துக் கணிப்பு: திமுக முன்னிலை, ஆனால் கடுமையான நான்கு முனைப் போட்டி காரணமாக முடிவுகள் கணிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

ஜி நியூஸ் (Zee News Exit Poll)
திமுக கூட்டணி: 140–162 இடங்கள் (43–46% வாக்கு)
அதிமுக கூட்டணி: 52–74 இடங்கள் (36–39% வாக்கு)
தமிழக வெற்றிக் கழகம் (விஜய்): 8–18 இடங்கள் (14–19% வாக்கு)
நாம் தமிழர் கட்சி (சீமான்): 0–2 இடங்கள் (4–5% வாக்கு)
மற்றவர்கள்: 2–6 இடங்கள் (3–5% வாக்கு)

என்.டி.டி.வி Peoples Pulse Exit Poll

திமுக கூட்டணி: 125–145 இடங்கள் (38.4% வாக்கு)
அதிமுக கூட்டணி: 65–80 இடங்கள் (31.5% வாக்கு)
தமிழக வெற்றிக் கழகம் (விஜய்): 18–24 இடங்கள் (23.6% வாக்கு)
மற்றவர்கள்: 2–6 இடங்கள் (6.5% வாக்கு)

ரி-பப்ளிக் பி மார்க் (Republic–B Mark)

திமுக கூட்டணி: 125–145 இடங்கள்
அதிமுக கூட்டணி: 65–85 இடங்கள்
தமிழக வெற்றிக் கழகம்: 16–26 இடங்கள்
மற்றவர்கள்: 1–6 இடங்கள்

ஜே.வி.சி டைம்ஸ் நவ்

அதிமுக கூட்டணி: 128–147 இடங்கள்
திமுக கூட்டணி: 75–95 இடங்கள்
தமிழக வெற்றிக் கழகம்: 8–15 இடங்கள்

சி.என்.என் நியூஸ் 18

திமுக கூட்டணி: 103–113 இடங்கள்
அதிமுக கூட்டணி: 114–124 இடங்கள்
தமிழக வெற்றிக் கழகம் : 4–10 இடங்கள்

அஸ்ஸாம்

முக்கிய போட்டி: காங்கிரஸ் vs பாஜக
கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி வலுவாக இருப்பதாக சில கணிப்புகள், ஆனால் காங்கிரஸ் முன்னிலை எனவும் சில ஆய்வுகள்

மேற்கு வங்கம்

முக்கிய போட்டி: திரிணமூல் காங்கிரஸ் vs பாஜக
கருத்துக் கணிப்பு: திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை, பாஜக வலுவான சவால்

பெரும்பாலான கணிப்புகள் காங்கிரஸ் கூட்டணிக்கு முன்னிலை காட்டினாலும், சில கணிப்புகள் இடதுசாரி கூட்டணிக்கு வலுவான நிலையை சுட்டிக்காட்டுகின்றன.

புதுச்சேரி

புதுசேரியில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் அங்கு ஆட்சி மாற்றம் இல்லை எனத் தெரிவிக்கின்றன.

பொறுப்பு துறப்பு: தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 4, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பதால், இவை வெறும் கருத்துக் கணிப்புகள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் என சொல்லவில்லை.. தொல். திருமாவளவன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com