Vladimir Putin: ஈரானுக்கு ஆதரவளிக்கவும் மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்கவும் ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்துள்ளார்.
Vladimir Putin: ஈரானுக்கு ஆதரவளிக்கவும் மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்கவும் ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்துள்ளார்.

Published on: April 28, 2026 at 3:52 pm
மாஸ்கோ, ஏப்.28, 2026: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மேற்காசியாவில் நிலவும் பிராந்திய நெருக்கடியை முன்னிட்டு, ஈரானுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அமைதியை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் நடைபெற்ற சந்திப்பில், புதின் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இந்தச் செய்திகள் ஈரான் அரசின் ஊடகங்கள் தரப்பில் வெளியாகியுள்ளன. அதில், தின், ஈரானுக்கும் மற்ற பிராந்திய நாடுகளுக்கும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க மாஸ்கோவின் உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், ஈரான் மக்கள் தற்போதைய கடினமான சூழ்நிலையை கடந்து, விரைவில் அமைதி நிலைநிறுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரான் தூதர் அரக்சி, ஈரான் மற்றும் ரஷ்யா பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் நெருக்கமான ஆலோசனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கூறினார். சமீபத்திய நிகழ்வுகள் காரணமாக, உயர் மட்ட சந்திப்புகளில் இடைவெளி ஏற்பட்டிருந்ததை, தற்போது புதிய தூதரக முயற்சிகள் மூலம் சரி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரக்சி, பாகிஸ்தான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு விஜயம் செய்த பின், விரிவான பிராந்திய ஆலோசனைகளின் ஒரு பகுதியாக ரஷ்யாவுக்கு வந்துள்ளார். அவர், தனது பயணத்தின் போது ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் உடனும் சந்தித்து, பிராந்திய பதற்றங்களைப் பற்றிய விவாதங்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 5 முதல் 6 ரவுண்ட் துப்பாக்கிச் சூடு.. உயிர் தப்பிய டொனால்ட் ட்ரம்ப்.. வெள்ளை மாளிகையில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com