Merger of 7 AAP MPs with BJP : 7 ஆம் ஆத்மி எம்பிக்கள் பாஜகவுடன் இணைவதை ராஜ்யசபா தலைவர் ஏற்றுக்கொண்டார்.
Merger of 7 AAP MPs with BJP : 7 ஆம் ஆத்மி எம்பிக்கள் பாஜகவுடன் இணைவதை ராஜ்யசபா தலைவர் ஏற்றுக்கொண்டார்.

Published on: April 27, 2026 at 1:48 pm
புதுடெல்லி, ஏப்.27, 2026: மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஏழு ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க) இணைந்ததை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
இதனால் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 10-இல் இருந்து 3-ஆக குறைந்தது; பா.ஜ.க.வின் தனிப்பட்ட எண்ணிக்கை 113-ஆக உயர்ந்தது.
இந்த மாற்றத்தை முன்னெடுத்தவர்கள் ராகவ் சத்தா, சந்தீப் பாதக், அசோக் மித்தல் ஆகியோர் ஆவார்கள். இவர்களுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால், விக்ரம்ஜித் சிங் சாஹ்னே, ராஜிந்தர் குப்தா ஆகியோரும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி, இந்த இணைப்பை “அரசியல் மோசடி” என்றும் “பஞ்சாப் மக்களின் வாக்கு துரோகம்” என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், ராஜ்யசபா தலைவரிடம் ஏழு எம்.பி.க்களின் தகுதி நீக்கத்திற்கான மனுவையும் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், தற்போது சஞ்சய் சிங், என்.டி. குப்தா, பால்பீர் சிங் சீச்சேவால் ஆகிய மூவரே ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அவர்கள் ஏன் விலகினார்கள்? அன்னா ஹசாரே
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com