சாய் சுதர்சன் அதிரடி.. சொந்த மண்ணில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

CSK vs GT Highlights : குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சாய் சுதர்சன் 46 பந்துகளில் 87 ரன்கள் அடித்து அபார வெற்றிக்கு வழிகாட்டினார்.

Published on: April 26, 2026 at 10:48 pm

சென்னை, ஏப்.26, 2026: இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, டாஸ் இழந்த சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்நிலையில், தொடக்கத்தில் சஞ்சு சாம்சன் (11), உர்வில் படேல் (4), சர்ஃபராஸ் கான் (0) விரைவில் ஆட்டமிழந்தனர்.
மேலும், பிரெவிஸ் (2), ஷிவம் துபே (22), கார்த்திக் ஷர்மா (15), ஓவர்டன் (18) குறைந்த ரன்களில் அவுட்டானனர். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் நிலைத்து 60 பந்துகளில் 74 ரன்கள் அடித்தார்.

இதனால், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தனர். பந்துவீச்சில் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகள், அர்ஷாத் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் இன்னிங்ஸ்

159 ரன்களை இலக்காக கொண்டு குஜராத் டைட்டன்ஸ் ஆடியது. தொடக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் அதிரடி காட்டினர். கில் 23 பந்துகளில் 33 ரன்கள் அடித்து நூர் அகமது பந்தில் அவுட்டானார்.
இந்த நிலையில், சாய் சுதர்சன் 46 பந்துகளில் 87 ரன்கள் (7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) அடித்து ஹுசைன் பந்தில் அவுட்டானார். தொடர்ந்து, ஜோஸ் பட்லர் 39* ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
இந்த நிலையில், 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் ந்த வெற்றியால் குஜராத் டைட்டன்ஸ் புள்ளிப்பட்டியலில் முன்னேறியது; சென்னை அணி தடுமாறி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ராஜஸ்தான் vs ஹைதராபாத்.. வைபவ் சூர்யவன்சி அதிரடி சதம்!


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com