29 வயதில் ஹார்ட் அட்டாக்.. யார் இந்த ஹரியான்வி நடிகை திவ்யங்கா!

Haryanvi Actress Divyanka Sirohi Passes Away: ஹரியான்வி நடிகை திவ்யங்கா சிரோஹி 29-வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

Published on: April 25, 2026 at 3:20 pm

குருகிராம், ஏப்.25, 2026: ஹரியான்வி மொழி நடிகை திவ்யங்கா சிரோஹி 29-வது வயதில் மாரடைப்பால் காலமானார். இது திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

50-க்கும் மேற்பட்ட இசை காணொளிகளில் நடித்த ஹரியான்வி நடிகை திவ்யங்கா சிரோஹி, காஜியாபாத்தில் உள்ள தனது இல்லத்தில் 29-வது வயதில் திடீரென காலமானார். அவரது மறைவுச் செய்தி வெளியானதும், அகில இந்தியத் திரைப்படத் தொழிலாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இரங்கல்

அந்த இரங்கல் செய்தியில், “ஓர் கலைஞர் நம்மை விட்டுப் பிரியும்போது, ​​சக கலைஞர்கள் அந்தத் துயரத்தை ஆழமாக உணர்கிறார்கள். ஏனெனில், மற்றொரு கலைஞரின் போராட்டங்கள், கனவுகள் மற்றும் உணர்வுகளை ஒரு கலைஞரால் மட்டுமே உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த இக்கட்டான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கிக்கொள்ள இறைவன் அவர்களுக்குத் துணிவை அளிப்பாராக; அவரது ஆன்மா நித்திய சாந்தி பெறுவதாக. நீங்கள் என்றும் நினைவுகூரப்படுவீர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க : மோகன் லால் மகன் பிரணவ்- கல்யாணி திருமணமா? ரசிகரின் கேள்விக்கு லிசி பதில்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com