மத்திய அரசிடம் உரங்கள் கையிருப்பு இல்லை.. மல்லிகார்ஜுன் கார்கே!

JP Nadda Rejects Kharge’s Claim : மத்திய அரசிடம் உரங்கள் கையிருப்பு இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

Published on: April 25, 2026 at 12:45 pm

புதுடெல்லி, ஏப்.25, 2026: உரத் தட்டுப்பாடு குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் ஜேபி நட்டா நிராகரித்துள்ளார்.

மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டு

நாட்டில் உரம் பற்றாக்குறை இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்திய இரசாயன மற்றும் உரங்கள் துறை மத்திய அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா பதிலளித்துள்ளார்.

நட்டா பதில்

இது குறித்து ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்த ஜெகத் பிரகாஷ் நட்டா, “நரேந்திர மோடி அரசு எப்போதும் விவசாயிகளுடன் உறுதியாக நிற்கும். நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் போதிய அளவில் உரங்கள் கையிருப்ப உள்ளன” என்றார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கருத்தை, விவசாயிகளை தவறாக வழிநடத்தி, தேவையற்ற அச்சத்தை உருவாக்கும் அரசியல் நோக்கமுள்ள முயற்சியாக நட்டா விமர்சித்தார்.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்திய விவசாயிகள் உலகளாவிய விலை அதிர்ச்சிகளிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய உர இருப்பு நிலை, கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க வகையில் வலுவாக இருப்பதாகவும் நட்டா உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க : திடீர் மழையால் பயிர்கள் சேதம்.. விவசாயிகளுக்கு கைகொடுக்கும் மத்திய அரசு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com