புழுதி, ஆழம்.. கவனம் பெறும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி!

Tirunelvelis Radhapuram : ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் யார் வெற்றிப் பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Published on: April 22, 2026 at 4:17 pm

திருநெல்வேலி, ஏப்.22, 2026: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி, தமிழ்நாடு முழுக்க கவனம் பெற்று வருகிறது. இந்தத் தொகுதியில் தி.மு.க. சார்பில் சபாநாயகர் அப்பாவு, பா.ஜ.க. சார்பில் எஸ்.பி பாலகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மருத்துவர் சதீஷ் கிறிஸ்டோபர் மற்றும் நாம் தமிழர் சார்பில் கிரிஜா தாமரை பாண்டியன் ஆகியோர் முதன்மை வேட்பாளர்களாக உள்ளனர்.

தொகுதி பிரச்னை

இந்தத் தொகுதியில் நீண்ட நாள்களாக நீர் பிரச்னை உள்ளது. இதனால், மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இது தொடர்பாக, தொகுதிக்கு உட்பட்ட இருக்கன்துறையை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், “ஒரு ஏக்கர் நிலத்தில் பூ உள்ளிட்ட விவசாய பருவம் செய்துள்ளேன். இதற்கே போதிய தண்ணீர் வசதி இல்லை. இதனால், தின கூலி வேலைக்கும் சென்று வருகிறேன் என்றார்.
இதே போன்ற பிரச்னையை தொகுதி மக்கள் பரவலாக அனுபவித்து வருகின்றனர். மேலும், தொகுதியில் மேற்கு பகுதி, கிழக்கை காட்டிலும் செழிப்பாக உள்ளது.

தொகுதிக்கு உட்பட்ட வள்ளியூர் உள்ளிட்ட பகுதியில் மருத்துவ மற்றும் இதர வசதிகள் உள்ளன. பணகுடி மற்றும் வள்ளியூர் அரசு மருத்துவமனைகளால் மக்கள் பயன்பெறுகின்றன. இந்தத் திட்டங்கள் சபாநாயகர் மு. அப்பாவு கொண்டு வந்தவை ஆகும்.

தி.மு.க வேட்பாளர் மு அப்பாவு

இந்தத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக மு. அப்பாவு உள்ளார். இவர், தொகுதிக்கு செய்து கொடுத்துள்ள திட்டங்கள் மற்றும் முதலமைச்சரின் பெண்களுக்கு ஆதரவான திட்டங்கள் உள்ளிட்ட காரணங்களால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.

பா.ஜ.க வேட்பாளர் பாலகிருஷ்ணன்

பா.ஜ.க வேட்பாளர் பாலகிருஷ்ணன், “தொகுதியில் உள்ள சட்டவிரோத கல்குவாரிகளை மூடுவேன்” என வாக்குறுதி அளித்து வருகிறார். இதே வாக்குறுதியை நாம் தமிழர் கிரிஜா பாண்டியனும், த.வெ.க வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபரும் அளித்து வருகின்றனர்.

வாக்குப்பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இதையும் படிங்க : த.வெ.க.வை நம்பும் மக்கள்.. கூட்டணி வைப்பது துரோகம்.. அருண் ராஜ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com