ராகுலுக்கு செக் வைத்தது யார்? மம்தா? தேர்தல் ஆணையம்.. பரபரப்பு தகவல்கள்!

Congress Blames Mamata Govt : ராகுல் காந்தி ஏப்ரல் 23ஆம் தேதி மேற்கு வங்காளத்தில் பரப்புரை மேற்கொள்ள இருந்தது. இந்நிலையில் அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

Published on: April 22, 2026 at 9:45 am

கொல்கத்தா, ஏப்.22, 2026: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 23 அன்று கொல்கத்தாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, காங்கிரஸுக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸுக்கும் இடையிலான மாநில அளவிலான உரசல் அதிகரித்துள்ளது.

அதாவது, திரிணாமுல் காங்கிரஸின் வேண்டுகோளின் பேரில், உள்ளூர் நிர்வாகம், குறிப்பாக காவல்துறை, இந்த வருகைக்கு அனுமதி வழங்கவில்லை என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. காங்கிரஸின் கூற்றுப்படி, அக்கட்சி ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை காத்திருந்தது; ஆனால் அனுமதி வழங்கப்படாததால், அந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்வது அதற்குப் பிறகு சாத்தியமாகவில்லை எனக் கூறியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் விளக்கம்

இதற்கிடையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அளித்துள்ள விளக்கத்தில், “பொதுக்கூட்டங்களுக்கான விண்ணப்பங்களை, கூட்டம் நடைபெறுவதற்கு 2 முதல் 7 நாட்களுக்கு முன்னதாக சுவிதா இணையதளம் மூலம் அனுப்ப வேண்டும்; ஆனால் காங்கிரஸ் அவ்வாறு செய்யவில்லை. இதனால் அனுமி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது” என அக்கட்சி மூத்த நிர்வாகியும், அமைச்சருமான சசி பாஞ்சா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. நாட்டை தவறாக வழிநடத்தும் மோடி.. மம்தா பானர்ஜி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com