சாதாரண பெண்கள் முன்னேற்றத்தை கண்டு தி.மு.க.வுக்கு ஏன் பயம்? பிரதமர் மோடி கேள்வி

Womens Reservation Bill : நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதா தோல்வி அடைந்த நிலையில், திமுக, காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published on: April 18, 2026 at 9:20 pm

புதுடெல்லி, ஏப்.18, 2026: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒரு உன்னதமான முயற்சி; ஆனால், திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதனை “வெறுப்பு மற்றும் சிறு அரசியலின் இலக்காக” மாற்றிவிட்டன எனவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையில், கோயம்புத்தூரில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “சாதாரண பெண்கள் முன்னேறுவதைக் கண்டு திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் ஏன் கவலை?” என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த மசோதாவை ஆதரிக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்ததாகவும், அதற்கான பெருமையை அவர்களுக்கு வழங்குவதாகவும் உறுதியளித்ததாகவும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

இது குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த சகோதரிகள் அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் வர வேண்டும் என்று மட்டுமே நான் விரும்பினேன்” என்றார்.
மேலும், “ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த உன்னதமான முயற்சி தடம்புரண்டது. திமுக, காங்கிரஸ் மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகள் இதை வெறுப்பு மற்றும் சிறு அரசியலின் இலக்காக மாற்றின” எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இதையும் படிங்க: பெரியார் கொள்கையை அழிக்க முயற்சி.. மு.க ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது.. ராகுல் காந்தி!


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com