Jana Nayagan leak Row : ரசிகர்களே, ஜனநாயகன் திரைப்படத்தை தியேட்டரில் பாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.
Jana Nayagan leak Row : ரசிகர்களே, ஜனநாயகன் திரைப்படத்தை தியேட்டரில் பாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

Published on: April 12, 2026 at 11:53 am
ஹைதராபாத், ஏப்.12, 2026: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் கடைசிப் படமாக ஜனநாயகன் பார்க்கப்படுகிறது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் படம் வெளியாவதில் பிரச்னைகள் ஏற்பட்டன. இதற்கிடையில் படம் ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.
இது படத்தில் நடித்துள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர் மற்றும் ரசிகர்கள் என அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் என நடிகை பூஜா ஹெக்டே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பூஜா ஹெக்டே வேண்டுகோள்
இதற்கிடையில், சனிக்கிழமை (ஏப்.11) பூஜா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவைப் பகிர்ந்தார். அதில், “என் அன்பான ரசிகர்களே. ஒரு திரைப்படம் என்பது எண்ணற்ற மணிநேர உழைப்பு, படைப்பு சார்ந்த துணிச்சலான முயற்சிகள், தனிப்பட்ட தியாகங்கள் மற்றும் உங்களுக்குச் சாத்தியமான சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் உழைத்த ஒரு குழுவின் கூட்டு முயற்சியின் விளைவாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “எங்கள் திரைப்படம் இணையத்தில் கசிந்திருப்பது எனக்கு மட்டுமல்ல, அதில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் மன வருத்தத்தை அளிக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ரசிகர்கள் திரைப்படத்தை தியேட்டரில் வெளியான பின்பு பாருங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இணையத்தில் கசிந்த ஜனநாயகன்.. சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com