தமிழ்நாட்டின் தொகுதியை 32 ஆக குறைக்க முயற்சி.. உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi on Delimitation Row : தொகுதி மறுவரை பிரச்னையை முதலில் எழுப்பியவர் மு.க ஸ்டாலின்தான் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Published on: April 12, 2026 at 9:36 am

சென்னை, ஏப்.12, 2026: “நாட்டிலேயே தொகுதி மறுவரையறை முதன் முதலில் எழுப்பியவர் மு.க ஸ்டாலின்தான்” என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

இது தொடர்பாக அவர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “தொகுதி மறுவரையறை குறித்து, கடந்த ஆண்டு நாட்டிலேயே எங்கள் தலைவர்தான் இந்தப் பிரச்சினையை எழுப்பிய முதல் நபர். இது தொடர்பாக நாங்கள் ஒரு மாநாட்டையும் நடத்தினோம்” என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பேட்டி

(நன்றி: பி.டி.ஐ)

மேலும், “அதில் தென்னிந்திய மாநிலத் தலைவர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். இப்போது அவர்கள் மிக விரைவில் மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்கின்றனர். எனவே, இந்தப் பிரச்சினையை எழுப்பிய முதல் கட்சி நாங்கள்தான்” எனவும் கூறினார்.

தொடர்ந்து, “நான் கேள்விப்பட்ட வகையில், அவர்கள் இடங்களின் எண்ணிக்கையை 39-லிருந்து 32-ஆகக் குறைக்க முயற்சிப்பதால், நாங்கள் மாநில உரிமைகளுக்காக உறுதியாகப் போராடி, தொகுதி மறுவரையறைக்கு எதிராக நிற்போம். நாங்கள் அவர்களின் உரிமைகளுக்காகவும் உறுதியாகப் போராடுவோம்” என்றார்.

இதையும் படிங்க: விசில் or இரட்டை இலை.. சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்!

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி! Defection Row

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின் பதறவைக்கும் நிமிடங்கள்! Vietnam Boat Tragedy

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின்

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய் Perambur MLA Office

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com