Jana Nayagan leak Row: நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் தமிழக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்திவருகின்றனர்.
Jana Nayagan leak Row: நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் தமிழக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்திவருகின்றனர்.

Published on: April 12, 2026 at 9:20 am
சென்னை, ஏப்.12, 2026: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் கடைசி படமாக ஜனநாயகன் பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை டைரக்டர் ஹெச். வினோத் இயக்கியுள்ளார்.
படத்தில் அரசியல் காட்சிகள் தூக்கலாக உள்ளன எனக் கூறப்படுகிறது. இந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் பொங்கலுக்கு திரைக்கு வர இருந்தது.
இந்நிலையில் படத்திற்கு சர்டிபிகேட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், படக் குழுவினர் நீதிமன்றம் சென்ற போதிலும் படத்தின் வெளியீட்டில் தொடர் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைனில் திருட்டுத் தனமாக வெளியானது. இது ரசிகர்கள், படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வழக்குப்பதிவு
இந்நிலையில், ஜனநாயகன் படத்தை ஆன்லைனில் திருட்டுத் தனமாக கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என படக்குழுவினர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ‘திருட்டுத்தனத்தை ஆதரிக்காதீர்கள்’.. ஜன நாயகன் நடிகை மமிதா பைஜு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com