Madras HC Directs ASI-Revenue Hill Survey: மதுரை திருப்பரன்குன்றம் மலை விவகாரத்தில் தொல்லியல் ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வு மே மாதத்துக்குள் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Madras HC Directs ASI-Revenue Hill Survey: மதுரை திருப்பரன்குன்றம் மலை விவகாரத்தில் தொல்லியல் ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வு மே மாதத்துக்குள் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Published on: April 9, 2026 at 6:39 pm
மதுரை, ஏப்.9, 2026: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு புதன்கிழமை, மதுரை மாவட்ட ஆட்சியர், தொல்லியல் ஆய்வு துறை (ASI) உடன் இணைந்து திருப்பரங்குன்றம் மலைக்கு கூட்டு ஆய்வு நடத்த வருவாய் அதிகாரிகள் ஒத்துழைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், இந்த ஆய்வு மே மாத இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எஸ். ஸ்ரீமதி ஆகியோர், இந்த உத்தரவை பிறப்பித்தனர். முன்னதாக, மதுரையைச் சேர்ந்த இந்து தர்ம பரிஷத் நிர்வாக அறங்காவலர் கே.கே. ரமேஷ் தாக்கிய அவமதிப்பு மனுவின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர், 2025 பிப்ரவரி 19 அன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி மனுத்தாக்கல் செய்த இருந்தார். இந்நிலையில், துணை சட்டத்துறைச் செயலாளர் கே. கோவிந்தராஜன், ரமேஷின் மனுவைத் தீர்மானிக்க, மலைக்கு கூட்டு ஆய்வு அவசியம் என வாதிட்டார்.
ஆனால் வருவாய் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என அவர் தெரிவித்ததால், நீதிமன்றம் இத்தகைய உத்தரவை வழங்கியது. வழக்கு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
ரமேஷ் தனது மனுவில், திருப்பரங்குன்றம் மலை மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், துறையின் அனுமதி இல்லாமல் யாரும் மலை ஏறக்கூடாது என்றும் வலியுறுத்தினார். மேலும், மலைக்குள் உள்ள கோவில்களைப் பாதுகாக்கவும், சுற்றியுள்ள குப்பைகளை அகற்றவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.
இதையும் படிங்க : கோவை வந்த போதிலும் பரப்புரை மேற்கொள்ளாத ராகுல்.. சிக்கலை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com