Assembly Election 2026 : சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.
Assembly Election 2026 : சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.

Published on: April 7, 2026 at 6:29 pm
புதுடெல்லி, ஏப்ரல் 7 2026: அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை நிறைவடைகிறது. இறுதி கட்ட பிரச்சாரமாக, பல்வேறு அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவைப் பெருக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அசாமில் 126 தொகுதிகள், கேரளத்தில் 140 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
நேற்று அசாமில் பர்பேட்டா, ஹோஜாய் மற்றும் டிப்ருகர் பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அசாமில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களும் சமமான வளர்ச்சியை பெறுவது தான் தனது கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் (NDA) கொண்டுள்ள முக்கிய இலக்கு என அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் அமைதியும் முன்னேற்றமும் நிலவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் குவாஹாத்தியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி செல்ஜா, அனைவருக்கும் சம உரிமையும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் கொள்கை என தெரிவித்தார். அசாம் கண பரிஷத், அசாம் ஜாதிய பரிஷத் மற்றும் ரைஜோர் தள் உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகளும் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
புதுச்சேரியிலும் நேற்று பரபரப்பான தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தனர்.
கேரளத்திலும் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட்ஷோக்களில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தின் முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்படுகின்றன. இரு மாநிலங்களிலும் வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற வியாழக்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தின் முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கும் இம்மாதம் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்காளத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 29 ஆம் தேதி 142 தொகுதிகளுக்கு நடைபெறும்.
அசாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மேற்கு வங்கத்தில் ஊடுருவிகள் அகற்றப்படுவார்கள்.. அமித் ஷா உறுதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com