Sattankulam custodial deaths: சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிஸ் லாக்கப் படுகொலை வழக்கில் மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
Sattankulam custodial deaths: சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிஸ் லாக்கப் படுகொலை வழக்கில் மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

Published on: April 6, 2026 at 6:41 pm
Updated on: April 6, 2026 at 6:45 pm
மதுரை ஏப்ரல் 6, 2026; சாத்தான்குளம் காவல் நிலையக் கொடுமை மரண வழக்கில் (ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்) மதுரை முதல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 6, 2026) தீர்ப்பை வழங்கியது.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் சுமார் ஆறு ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கணேஷ் உட்பட பத்து காவலர்கள் மீது புகார் பதியப்பட்டுள்ளது. இவர்கள் மீது, விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களை அடித்து கொடுமைப்படுத்தி உயிர்ச்சேதம் ஏற்படுத்தியதாக புகார்கள் உள்ளன.
காவல் நிலையத்தில் ஏற்பட்ட கொடுமை காரணமாக இருவரும் (ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்) உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கில் 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என கடந்த 23-ந்தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். தண்டனை விவரத்தை இன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் வழங்கியது.
அந்தத் தீர்ப்பில் குற்றத்தில் ஈடுபட்ட ஒன்பது போலீசாரும் குற்றவாளிகள். காவல் நிலையத்தில் வைத்து இருவரும் சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர். தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் அடைத்து வைத்து தாக்கியதை எளிதாக கருத முடியாது. குற்றவாளிகள் நல்ல அறிவு வளர்ச்சி உள்ளவர்கள். படித்தவர்கள். இதை சாதாரண குற்றமாக கருத முடியாது. தந்தை, மகன் இருவர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. ஒரே நேரத்தில் தந்தை, மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை வழங்கினால் இப்படி செயல்படும் போலீசாருக்கு அச்சம் ஏற்படாது என்று தெரிவித்த நீதிபதி 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளார். மேலும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதையும் படிங்க : இந்திய கிறிஸ்துவ மதச்சார்பற்ற கட்சி அதிமுகவுக்கு ஆதரவு.. மு.க ஸ்டாலின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com