Gold Rate Today : தங்கம் விலை இன்று காலை குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.
Gold Rate Today : தங்கம் விலை இன்று காலை குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.

Published on: April 6, 2026 at 4:05 pm
சென்னை, ஏப்ரல் 6 2026: உலக சந்தையில் டாலர் மதிப்பு, எண்ணெய் விலை, மற்றும் அமெரிக்க வட்டி விகிதம் போன்ற காரணிகள் தங்கத்தின் விலையை நேரடியாக பாதிக்கின்றன.
இந்நிலையில், இன்று காலை தங்கம் விலை நேற்றைய விலையை கிராமுக்கு ரூ. 140 குறைந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 13 ஆயிரத்து 810 மற்றும் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்து 480 ஆகவும் இருந்தது. ஆனால், இன்று மதியம் தங்கம் விலையில் சிறிய உயர்வு ஏற்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 40 உயர்ந்து விலை மாற்றம் பதிவாகியுள்ளது. இதனால் ஒரு கிராம் ரூ. 13,990ஆகவும் 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ரூ. 111,920 உள்ளது.
24 கேரட் தூய தங்கத்தைப் பொறுத்தவரை கிராம் ரூ. 15 ஆயிரத்து 262ஆகவும், ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 96 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொறுத்தமட்டில் கிராமுக்கு நேற்றைய விலையைவிட கிராமுக்கு ரூ. 5 உயர்ந்த ரூ. 260க்கும் ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : ரஷ்யா உள்பட மத்திய வங்கிகள் தங்கத்தை விற்பனை செய்கிறதா? இந்தியாவின் நிலை என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com