இந்த வாரம் ‘Buy’ மதிப்பிடப்பட்ட Top 10 பங்குகள்.. நோட் பண்ணுங்க ப்ளீஷ்!

Top 10 stocks rated Buy : இந்த வார எந்தெந்த பங்குகள் வாங்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். இது தொடர்பாக பிரபல ப்ரோக்கரேஜ் நிறுவனங்கள், வலுவான வளர்ச்சி வாய்ப்புகள் கொண்ட பங்குகளை பரிந்துரைக்கின்றன.

Published on: April 4, 2026 at 12:55 pm

மும்பை, ஏப்.4, 2026: முக்கிய ப்ரோக்கரேஜ் நிறுவனங்கள் வலுவான வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்ட 10 பங்குகளை சுட்டிக்காட்டியுள்ளன. இவை 11% முதல் 39% வரை வருமானம் தரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இது முதலீட்டாளர்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்தும் சிறந்த சந்தர்ப்பம் ஆகும். அந்த 10 பங்குகளின் பெயர்களையும் விவரங்களையும் பார்க்கலாம்.

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் போரைக் குறித்து பேசியபோது, உள்நாட்டு பங்குச் சந்தைகள் இந்த வாரம் மீண்டும் சரிவை சந்தித்தன. அதாவது, நிப்டி 50, 1.5% வீழ்ச்சியும், சென்செக்ஸ், 2.5% வீழ்ச்சியும் கண்டது.

டாப் 10 பங்குகள்

இதற்கிடையில், டாப் 10 பங்குகள் குறித்து பார்க்கலாம்.

1) எம்கே குளோபல் – கிரான்யூல்ஸ் இந்தியா மீது ‘Buy’ மதிப்பீடு, ₹800 இலக்கு விலை நிர்ணயித்துள்ளது. இது தற்போதைய சந்தை விலையிலிருந்து சுமார் 29% உயர்வு வாய்ப்பை குறிக்கிறது.

2) ஜே.எம். ஃபைனான்சியல் சர்வீஸ், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் மீது ‘Buy’ மதிப்பீட்டைத் தொடர்ந்து வைத்துள்ளது,

3) எம்.கே குளோபல் கல்பட்டாரு புராஜெக்ட் இன்டர்நேஷனல் (KPIL) மீது ‘Buy’ மதிப்பீட்டைத் தொடர்ந்து வைத்துள்ளது.

4) நோமுரா பாரத் எலக்ட்ரானிக்கல்ஸ் (BEL) மீது ‘Neutral’ நிலைப்பாட்டைத் தொடர்ந்து வைத்துள்ளது.

5) மோதிலால் ஓஸ்வால், மாரிகோ (Marico) மீது ‘Buy’ மதிப்பீட்டை வழங்கியுள்ளது.

6) அம்பிட் கேப்பிட்டல், வருண் பிவேரஜிஸ் (Varun Beverages) மீது ‘Buy’ பரிந்துரையை வழங்கியுள்ளது.

7) நுவமா இண்டர்நேஷனல் ஈக்விட்டிஸ், வெல்ஸ்பூன் கார்ப்பரேஷன் மீது ‘Buy’ மதிப்பீட்டைத் தொடர்ந்து வைத்துள்ளது.

8) மோதிலால் ஓஸ்வால், அதானி போர்ட்ஸ் அண்ட் எஸ்.இ.இசட் (SEZ) மீது ‘Buy’ மதிப்பீட்டை வழங்கியுள்ளது.

9) நோமுரா, பெட்ரோநெட் எல்.என்.ஜி மீது ‘Buy’ மதிப்பீட்டைத் தொடர்ந்து வைத்துள்ளது.

10) அம்பிட் கேப்பிட்டல், அஸ்ட்ரால் மீது ‘Buy’ பரிந்துரையை வழங்கியுள்ளது.

Disclaimer : இது எந்த வகையிலும் பங்குகளை வாங்க அல்லது விற்கும் அழைப்பு அல்லது ஆலோசனை அல்ல. பகுப்பாய்வு தகவல்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் முதலீடு உள்ளிட்ட விஷயங்களுக்கு, SEBI-யில் பதிவு செய்யப்பட்ட நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

இதையும் படிங்க: குரல் வாக்கெடுப்பு, ராஜ்யசபாவில் திவால் திருத்த மசோதா நிறைவேற்றம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com