Gold Rate Today : தங்கம் விலையில் இன்று அதிரடி மாற்றங்கள் காணப்பட்டன.
Gold Rate Today : தங்கம் விலையில் இன்று அதிரடி மாற்றங்கள் காணப்பட்டன.

Published on: April 3, 2026 at 2:50 pm
சென்னை, ஏப்.3, 2026: தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) அதிரடி உயர்வு காணப்பட்டது. 24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை, 1 கிராம் ரூ.15,109 என நிர்ணயிக்கப்பட்டு, 8 கிராம் கொண்ட ஒரு பவுன் ரூ.1,20,872 ஆக காணப்பட்டது. நேற்று இது கிராம் ரூ.15 ஆயிரமாகவும், 8 கிராம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாகவும் காணப்பட்டது.
22 காரட் தங்கம்
22 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.13,850 என நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் ரூ.1,10,800 ஆகவும் காணப்படுகின்றது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொறுத்தமட்டில் மாற்றம் இன்றி காணப்படுகிறது. நேற்று கிராம் வெள்ளி ரூ.255 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் என காணப்பட்டது. இதேவிலை இன்றும் தொடர்கிறது. வெள்ளி ஏப்.1ஆம் தேதி கிராம் ரூ.265 ஆக காணப்பட்டது. அதாவது கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் ஆக காணப்பட்டது. அந்த வகையில் வெள்ளி கிலோ ரூ.10 ஆயிரம் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீடு தேடிவரும் அதிர்ஷ்டம்.. யாருக்கு முதல் பரிசு ரூ.1 கோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com