அதிர்ந்த இந்திய பங்குச் சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் 2% க்கும் மேல் சரிவு.. கச்சா எண்ணெய் 5% உயர்வு!

Share Market Today: இந்திய பங்குச்சந்தை நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இரண்டு சதவீதத்திற்கும் மேல் சரிந்தது; மறுபுறம், கச்சா எண்ணெய் ஐந்து சதவீத உயர்வை கண்டது.

Published on: April 2, 2026 at 1:03 pm

மும்பை ஏப்ரல் 2.2026; இன்றைய பங்கு வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கின; மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி உள்ளிட்டவை இரண்டு சதவீதத்திற்கும் மேல் சரிந்தன. எனினும் மறுபுறம் கச்சா எண்ணெயின் விலை ஐந்து சதவீதம் வரை அதிகரித்து காணப்பட்டது; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் பேச்சுக்கள் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் இன்று, சரிவுகள் காணப்பட்டன.

பங்குச்சந்தை நிலவரம்

கடந்த சில நாட்களில் பங்குச் சந்தையில் கடுமையான ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன. நிப்டி 2% சரிந்து 22,200 நிலைக்கு வந்துள்ளது.

சென்செக்ஸ் ஆரம்ப வர்த்தகத்தில் சுமார் 2% வீழ்ச்சி கண்டுள்ளது. சன் பார்மா, இண்டிகோ, அதானி போர்ட், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஏடர்நெல் (Eternal) ஆகிய நிறுவனங்களின் பங்குகள், சந்தை முழுவதும் ஏற்பட்ட சரிவில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.

திடீர் மாற்றம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானில் தனது முக்கிய “இலக்குகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன” என்று கூறினார். மேலும், “அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றி பெறுகிறது” என்றும், “வேலை விரைவில் முடிக்கப்படும்” என்றும் உறுதியளித்தார். இந்த நிலையில் இதன் தாக்கம் கச்சா எண்ணெய் விலை சந்தையில் காணப்படுகிறது.

இதையும் படிங்க; குரல் வாக்கெடுப்பு, ராஜ்யசபாவில் திவால் திருத்த மசோதா நிறைவேற்றம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com