Election Plea Against Suresh Gopi: கேரள உயர்நீதிமன்றம் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுவை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இது தொடர்பான விசாரணையை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.
Election Plea Against Suresh Gopi: கேரள உயர்நீதிமன்றம் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுவை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இது தொடர்பான விசாரணையை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.

Published on: April 1, 2026 at 5:17 pm
கொச்சி, ஏப்.1, 2026: கேரள உயர் நீதிமன்றம், மலையாள நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி தாக்கல் செய்த தேர்தல் மனுவை ரத்து செய்யும் கோரிக்கையை நிராகரித்துள்ளது. திருச்சூர் மக்களவை தொகுதியில் அவரது வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனு, ஆரம்ப நிலையில் தள்ளுபடி செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் வழக்கு முழுமையான விசாரணைக்கு செல்லும் வழி திறக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் மனுவை திருச்சூரைச் சேர்ந்த ஏ. எஸ். பினோய், என்பவர் தாக்கல் செய்துள்ளார். இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு (ஏ.ஐ.ஒய்.எஃப்) தலைவர் ஆவார். இந்நிலையில், நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவைப்படுத்துகிறது என்று குறிப்பிட்டு, இரு தரப்பினரும் ஆதாரங்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேர்தல் மனுக்கள், குற்றச்சாட்டுகளின் வலிமையை ஆய்வு செய்யாமல் நேரடியாக தள்ளுபடி செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் தாக்கல் செய்துள்ள மனுவில், வாக்காளர்களை பாதிக்க மதச் சின்னங்கள் மற்றும் உணர்வுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், பணம் உள்ளிட்ட பலன்கள் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது நிரூபிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 (RPA) விதிகளை மீறுவதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனைவியின் பெற்றோர் சொத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. ஆந்திர உயர் நீதிமன்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com