Assembly Election 2026: அண்டா, குண்டா, மிக்ஸி எல்லாம் தரமாட்டேன் என சீமான் அதிரடியாக பரப்புரை மேற்கொண்டார்.
Assembly Election 2026: அண்டா, குண்டா, மிக்ஸி எல்லாம் தரமாட்டேன் என சீமான் அதிரடியாக பரப்புரை மேற்கொண்டார்.

Published on: March 27, 2026 at 2:34 pm
சென்னை, மார்ச் 27 2026; வாக்காளர்களுக்கு அண்டா குண்டா மிக்ஸி போன்ற இலவச பொருட்களை நான் அறிவிக்க மாட்டேன் என கூறி நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டது மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது; இதில் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி, எண்ணிக்கை செய்யப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்களுக்கு ஒருபோதும் இலவச பொருட்களை நான் வழங்க மாட்டேன் என தெரிவித்தார்.
என்னைப் பொருத்தவரை நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை வாக்காளர்களுக்கு அண்டா குண்டா மிக்சி என இலவசமாக நான் தரமாட்டேன்; அதை எலலாம் நீங்களே வாங்கிக் கொள்ளும்படி உங்களுக்கு வேலையை தருகிறேன். அதற்கு உரிய சம்பளம் தருகிறேன் யார் கையையும் நீங்கள் எதிர்பார்க்காமல் தன்மானத்தோடு வாழக்கூடிய வாழ்க்கையை உங்கள் பிள்ளையாகிய நான் தருவேன்”என்றார்.
ஒரு மறை ஆட்சியில் என்னிடம் தாருங்கள்
தொடர்ந்து பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “இந்த நாட்டில் வலிமைமிக்க ஆயுதம் வாக்கு; உங்கள் ஒற்றை வாக்கு இந்த உலகை திரும்பி பார்க்க வைக்கும்’ என்றார். மேலும், “கருணாநிதி ஆட்சியை பார்த்து விட்டீர்கள்; ஜெயலலிதா ஆட்சியை பார்த்து விட்டீர்கள்; எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி பார்த்து விட்டீர்கள்; மு.க ஸ்டாலின் ஆட்சியை பார்த்து விட்டீர்கள்; ஒரு முறை என்னிடம் ஆட்சியை தாருங்கள்.!உங்களுக்கு நல்ல கல்வி உலக தரம் வாய்ந்த மருத்துவம் தூய குடிநீரை நான் இலவசமாக தருகிறேன்’ என்றார்.
இதையும் படிங்க; சென்னையை குறி வைக்கும் தமிழக வெற்றி கழகம்.. திமுகவுக்கு போட்டி ஆகுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com